Dharmpuri Village Assistant Recruitment: தமிழக அரசின் தர்மபுரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து 2025-ஆம் ஆண்டிற்கான விலேஜ் அசிஸ்டெண்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், அதே தாலுக்காவை சேர்ந்த நிரந்தர குடிமக்களும் விண்ணப்பிக்கலாம். தமிழில் வாசித்து எழுதக்கூடிய திறமை கட்டாயமாக தேவைப்படுகிறது. தேர்வு முறையாக நேர்முகத் தேர்வு மட்டும் நடைபெறும். விருப்பமுள்ள நபர்கள் 2025 ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கான இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள்:
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | தர்மபுரி வருவாய் துறை |
பதவி பெயர் | விலேஜ் அசிஸ்டெண்ட் |
பணியிடங்கள் | 39 காலிப்பணியிடங்கள் |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
பணியிட முகவரி | தர்மபுரி மாவட்டம் |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
தேர்வு முறை | நேர்முகத் தேர்வு |
தொடக்க தேதி | 21-07-2025 |
முடிவுத் தேதி | 20-08-2025 |
பணியிட விவரங்கள்:
பதவி | காலிப்பணியிடங்கள் | சம்பள அளவு |
---|---|---|
விலேஜ் அசிஸ்டெண்ட் | 39 | ரூ.11,100 – ரூ.35,100 (Level 06) |
முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
விலேஜ் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
-
10ஆம் வகுப்பு தேர்ச்சி
-
விண்ணப்பதாரர் அதே தாலுக்காவைச் சேர்ந்த நிரந்தர குடிமகனாக இருக்க வேண்டும்.
-
தமிழில் வாசிக்க மற்றும் எழுத கூடிய திறமை இருக்க வேண்டும்.
-
வேலை வாய்ப்பு வெளியிடப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
பிரிவுகள் | வயது வரம்பு |
---|---|
பொது பிரிவு (UR) | 21 முதல் 32 வயது வரை |
BC / MBC / SC / ST | 21 முதல் 37 வயது வரை |
மாற்றுத் திறனாளிகள் (PWD) | 21 முதல் 42 வயது வரை |
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எந்தவிதமான எழுத்துத் தேர்வும் இல்லை.
விண்ணப்ப கட்டணம்:
இல்லை – விண்ணப்ப கட்டணம் எதுவும்க்கப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை (ஆஃப்லைன்):
-
அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://dharmapuri.nic.in என்பதை பார்வையிடவும்.
-
அங்கு உள்ள அறிவிப்பை டவுன்லோடு செய்து முழுமையாக படிக்கவும்.
-
விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் இணைக்கவும்.
-
பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்பவும்.
-
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் – 20-08-2025
📌 முக்கிய குறிப்பு: ஆஃப்லைன் தவிர வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
முக்கிய தேதிகள்:
நிகழ்வு | தேதி |
---|---|
ஆஃப்லைன் விண்ணப்ப தொடக்கம் | 21-07-2025 |
விண்ணப்பத்தின் கடைசி நாள் | 20-08-2025 |
முக்கிய இணையதள இணைப்புகள்:
விவரம் | இணையதள இணைப்பு |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அறிவிப்பு PDF |
Dharmpuri Village Assistant Recruitment | dharmapuri.nic.in |